நீர் மேலாண்மையை சரியாகக் கையாளாவிட்டால் ஒரு நாட்டின் விவசாயத் தொழில்வளம் பாதிக்கப்படும். நிதி மேலாண்மை தெரியவில்லை என்றால் ஒரு குடும்பம் நலிவடைந்துவிடும். வரவுக்கு ஏற்ற செலவு என்று சொல்லும்போதே, வரவு வந்தால் அது செலவுக்குத்தான் என்ற அர்த்தமும் தொனிக்கிறது. ஆனால், வரவில் பாதியை சேமித்துவைக்கும் பழக்கம் பலருக்கு இருப்பதில்லை. பெரும்பாலான குடும்பத்தினர் ஒரு பண்டிகை வரப்போகிறது என்றால், அதற்கு ஒரு மாதம் முன்பே ‘எப்படியெல்லாம் செலவு செய்ய வேண்டும், எங்கெங்கு போக வேண்டும்’ என செலவு செய்யும் சிந்தனையிலேயே இருப்பார்கள். இந்த எண்ணம்தான் சேமிக்கும் பழக்கத்தைச் சிதைக்கிறது.
ஒரு குடும்ப நிம்மதியின் அடித்தளம் அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலைதான். போதிய அளவுக்கு வருமானம் இருந்தும் அந்த வருமானத்தை சிலர் செலவு வழியில் மட்டும் திருப்பிவிடுவதால் பிரச்னைகள் ஏற்படுகின்றன. நிறைவான வாழ்க்கைக்கு மிகவும் தேவையான நிதியை நிர்வகிக்கும் உத்தி பற்றி தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர். நாணயம் விகடனில் நிதி மேலாண்மையின் அவசியத்தைப் பற்றி விழிப்புஉணர்வை ஏற்படுத்திட வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இதில் கூறப்பட்டுள்ள நிதி ஆலோசனைகளைக் கையாள்பவர்களுக்கு நிம்மதி நிச்சயம்.
Be the first to rate this book.