நிசியில் மிதக்கும் ஆதிச்சிறகு என்ற நிம்மி சிவாவின் இப்பிரதியில் இயற்கையும் பறவையும் விலங்கும் வியாபித்துள்ளது. விலங்குகளைப் பறவைகளைக் கொண்டு தன் அகத்தை எதிரொலிக்கும் யுக்திக்குப் பயன்படுத்தியுள்ளார். இது புதிய முயற்சி. சாதுர்யம் எனலாம்.
கலைத்துவம் குறையாத புனைவுகளின் வழியாக நிசியையும் நிசியின் ஜீன்களான இருளையும் பற்றி எழுதிச் செல்வது வெளிச்சத்துக்காகத்தான் அல்லது நிம்மி சிவாவின் வெளிச்சமே நீங்கள் அஞ்சும் வெறுக்கும் இருளாக இருக்கிறது என்றும் சொல்லலாம்.
இந்தத் தொகுப்பு கவிதை வெளியில் மறுதலிக்க முடியாத பெண்ணியக் குரலாக, நமது அகநானூறு போல நவீன அகப்பாடலாக, புலம் பெயர்ந்த பெண்ணின் தாய்நிலம் ஏக்கத்தை, ஆண்களிடமிருந்து மீட்க வேண்டிய தம் ஆதிச்சிறகுகளை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
- அமிர்தம் சூர்யா
Be the first to rate this book.