இன்று ஒரு நாடு அதற்கு கீழ் மாநிலங்கள் அதற்கு கீழ் மாவட்டங்கள் அதற்கு கீழ் கிராமங்கள், பஞ்சாயத்துகள். இதுவெல்லாம் இன்று எல்லா நாட்டிலும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை. ஆனால் இதற்கு காரணமான இந்த முறையை அறிமுகப்படுத்தி நல்லாட்சி புரிந்த ஷெர்ஷா என்ற மாமன்னனை நமக்கு தெரியுமா? இன்று நாம் ரூபாய் என்றும் Rupees என்றும் அழைக்கப்படும் பெயர்க்கான காரணத்தை அறிந்துள்ளோமா? நாணய பண்டமாற்று முறைக்கு அடித்தளமிட்டவரின் பெயர் எப்படி நமக்கு தெரியாமல் போனது? பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் தானே நமக்கு தெரியும்! பள்ளிக்கூட பாடங்களே வரலாற்றுத் திரிபுகளைத் தானே பெருமளவில் கற்றுத்தருகின்றன.
இதுவரை நம் இந்திய நாட்டின் அரசு நிர்வாக முறைகள் ஆங்கிலேயர் ஆட்சி முறை நிர்வாகம்தான் என்று நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.உண்மை அதுவல்ல என்பது இப்புத்தகத்தின் வாயிலாக அறியலாம்.ஷெர்ஷாவின் ஆட்சி நிர்வாக முறைகளையே ஆங்கிலேயர்கள் காப்பி அடித்துள்ளனர். உதாரணமாக இன்று நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள நாணயத்தின் பெயரான ரூபாய் என்பது மன்னர் ஷெர்ஷா உருவாக்கிய நாணய முறைதான். இன்று பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளம், மாலத்தீவு போன்ற பல்வேறு நாடுகளில் ரூபாய் என்ற நாணய முறைதான் உள்ளது.அதுமட்டுமல்ல ராணுவ நிர்வாகத்திலும் நாம் ஷெர்ஷா கொண்டு வந்த நிர்வாக முறையையே பின்பற்றுகின்றோம்.
இன்னும் அதிகம் அவரை பற்றி தெரியவேண்டியுள்ளது. பாடப்புத்தகத்தில் கிடைக்காது ! இந்நூலை வாசியுங்கள். அவரை அறியலாம்.
Be the first to rate this book.