நிருபரின் நினைவுகள் கடலென ஆழமானவை; விண்ணென விரிவானவை. முதியவரின் மூளையில் முளைப்பவை, இளையவரின் வேலைக்கு வித்தாகும். எனவே வருங்கால தலைமுறையினருக்கு இறந்தக் காலச் சிறந்தவற்றை ஆவணப்படுத்தித் தர வேண்டுமென்று என்று எண்ணமுற்றேன்.
என் அரைநூற்றாண்டுகால நாளிதழ் மற்றும் ஊட க அனுபவங்களின் பிழிவுகளை அவ்வப்போது , சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறேன். இவற்றை வாசித்தோர் அனைவருமே நேசித்தோர் ஆயினர். பொதுமக்களால் பரவலாக பேசப்படும் முக்கிய பிரமுகர்களை பற்றிய என் சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு தான் அந்த பதிவுப் படைப்புகள். அவற்றுள் சிலவற்றை வாசக நேசகர்களுக்கு வழங்கும் நோக்கோடு, இந்த குறுநூலை உருவாக்கியுள்ளேன்.
Be the first to rate this book.