வெண்மணி தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம் தான் சாயும் என்பது உறுதியாக உள்ளது. முன்பே குறிப்பிட்டது போல் 44 பேரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள் 23 வீடுகளைத் தீக் கிரையாக்கியவர்கள், துப்பாக்கியால் சுட்டு 33 குண்டுகளுடன் 14 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியவர்கள் யார்? இவ்வளவு பாதிப்புக்கும் ஆளானவர்கள் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்று நமது நாட்டு சட்டங்களால் நீதிமன்றத்தில் நிறுத்தினாலும், இவர்கள் இதைச் செய்தவர்கள் என்று நீதிமன்றங்கள் ஏற்காது. இது தான் இன்றைய சமூக, வர்க்கச் சூழல். இதற்கான ஆவணங்கள் முழுவதையும் தேடிப்பிடித்து இன்றைய இளைய தலை முறைக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி ஆவணங்களை நின்று கெடுத்த நீதி என்ற புத்தக வடிவமாக நம் கையில் தந்துள்ளனர். வெண்மணிக் கனல் அணையாமல் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த நூல் நிச்சயம் பயன்படும்.
- தீக்கதிர்
Be the first to rate this book.