இன்றைய கேரள மாநிலம் (அன்றைய 'சென்னை ராஜதானி') காசர்கோடு வட்டத்தில் 1938-1944 ஆம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற உழவர் போராட்டத்தில் பூத்துக் செழித்தவர்கள்தான் மடத்தில் அப்பு. அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய இளந்தளிகள் , 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியன்று நடைபெற்ற விவசாயிகல் ஊர்வலத்தை இவர்களின் வழிநடத்திச் சென்றபோது 'ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபிளேடு அந்த ஊர்வலம் கைகலந்தது. அதன் விளைவாக அந்தப் போலீச்காரன் உயிர் துறந்தான்.
அந்தப் போலீஸ்காரனை அடித்துக் கொன்றவர்கள் இந்தக் கோட்டின் முன் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய மரணத்திற்கு இவர்களும்தான் பொறுப்பாளிகள் என்று கூறி செஷன்ஸ் ஜட்ஜ்,அவர்களுக்கு தூக்குதண்டனை விதித்தார். சென்னை ஹைக்கோர்ட்டும் அந்த்த் தண்டனையை ஊர்ஜிதம் செய்தது.
இந்நால்வர் தூக்குமேடை ஏறக் காரணமாக இருந்த விவசாய இயக்கத் கதையைக் கன்னடத்தின் புகழ்மிக்க எழுத்தாளர் நிரஞ்சனா கன்னட மொழியில் 1955 இல் 'சிரஸ்மரணா' எனும் பெயரில் புதின இலக்கியத்தில் பதியம் செய்தார். மலையாள மண்ணில் மலையாள மொழியில் நடந்த கதை முதன் முதலாக மொழி கடந்து கன்னடத்தைக் பற்றி உலுக்கியது. கதைக்களமான கையூர் கேரளத்தின் வடமேற்குக் கடைகோடியில், கர்நாடாகத்தின் தெற்கு எல்லையிலும் அமைந்த ஊர்.
கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குப் போய் மலையாளத்திலிருந்து தமிழில் இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போது தலைமறைவு நாட்களில் பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்த்தார்.
நினைவுகள் அழிவதில்லை எனும் பெயரில் 1977 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக தமிழில் வெளிவந்தது.
Be the first to rate this book.