ஸ்தூலமான கதையும் இல்லை. ஸ்தூலமான கருத்தோட்டமும் இல்லை. இந்த இரண்டுவிதமான பாதுகாப்புகளும் இல்லாமல் நாவல் எழுத முடியுமா? அப்படி எழுதினாலும் உணர்வுபூர்வமான மனநிறைவு அளிக்கும்படி எழுதமுடியுமா? இவை பூதாகாரமான கேள்விகள். ஆனால் (பந்தய) ஆட்டத்தை ஏற்றுக்கொண்டு நகுலன் படைப்பிலக்கியத்தில் சிறப்பிடம் பெறும் நாவலாக ‘நினைவுப் பாதை’யை உருவாக்கியிருக்கிறார்.
இது ஓர் எழுத்தாளனின் நினைவுப் பாதை. அசலாக சதையும் ரத்தமுமாக உயிர் வாழும் ஓர் எழுத்தாளனின் நினைவுப் பாதை. இதில் வேறு பல எழுத்தாளர்களும் வருகிறார்கள். அநேகமாக எல்லாரையும் அடையாளம் கண்டுகொள்வதனால் இந்த நாவலுக்குப் புது அர்த்தம் ஒன்றும் ஏற்பட்டுவிடுவதில்லை. காரணம் அப்படிச் சிலர் இப்போதும் இருக்கிறார்கள் என்ற உண்மை தவிர அவர்கள் இங்கு பாத்திரங்கள் ஆவதில்லை. மனிதர்கள், கருத்துகள், இவற்றைவிடச் சில தன்மைகள்தான் இந்த நாவலில் முக்கியத்துவம் பெறுபவை.
தமிழ் உரைநடை இலக்கியத்துக்கு ‘நினைவுப் பாதை’ ஒரு புது மரபை அளிக்கிறது. தமிழ் நாவல்களில் மிக முக்கியமானது என்று மிகச் சில நாவல்களைப் பொறுக்கினாலும் அதற்குள் இது இருக்க வேண்டியது
Be the first to rate this book.