தி.க.சி.யுடன் உரையாடுவது ஓர் ஆனந்த அனுபவம். சற்று முன்பு அறிமுகமான புதிய மனிதரிடத்தில் கூட நீண்டநாள் நண்பரிடம் பேசுவது போன்று உரையாடுவது அவரின் தனித்த இயல்பு. ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்நிகழ்வு பற்றிய சம்பவங்களையும் நினைவுகளையும் தங்குதடையின்றி, தொய்வின்றி, சரளமாக, உற்சாகமாக உரையாடுவது அவரின் தொனி.
தனது எண்பது ஆண்டுகால இலக்கிய வாழ்வில் இறுதிமூச்சுவரை மனிதம் வற்றாத மாமனிதராக வாழ்ந்தவர் தி.க.சி. அவருடன் முரண்பட்டவர்கள் கூட அவரை நேசித்தனர். கருத்து வேறுபாடுகளை கடந்து வாழ்ந்தவர்; சிரித்து வாழ்ந்த வெள்ளை மனிதர் அவர்.
Be the first to rate this book.