"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோடு' எனும் நாவலையும் ஒரே சமயம் அடுத்தடுத்து படித்துப் பார்க்கையில் படைப்பு ரீதியாக புனைகதையொன்றை சிறந்த எழுத்துக் கலைஞன் ஒருவன் கலை வடிவாக எவ்வளவு நேர்த்தியுடன் தன் அனுபவ வாழ்க்கையிலிருந்து பார்வை கிரகிப்பிலிருந்து செதுக்கிச் செதுக்கி உருப்பெருக்குகிறான் என்பது விளங்கும்." "ஒரு புனைகதைப் படைப்பாளி - அசோகமித்திரன் என்ற மனிதாபிமானி, சர்வதேச இலக்கியம் பற்றி யஅக்கறையும் அறிவும் ஓரளவுக்கு நேரடியனுபவமும் கொண்ட மனிதனின் ஏராளமான கட்டுரைகளில் எப்படித் திரும்பினாலும் இலக்கியமும், அருமையான ரசனையும் நிறைந்து நம்மையும் திளைக்க வைக்கின்றன."
- விட்டல் ராவ்
Be the first to rate this book.