நடுவன் அரசின் சுங்கத்துறையில் எழுத்தராக தனது வாழ்வைத் தொடங்கி உதவி ஆணையராக 1994இல் ஓய்வு பெற்றவர் கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விஸ்வரூபம்’ 1979இல் வெளிவந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக இவர் முழுநேர இலக்கிய-ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு வருகிறார். 2012இல் ‘பாப்பாப் பாட்டில் பகவத்கீதை’ என்ற இவரது ஆய்வு நூலை விஜயா பதிப்பகம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ‘சொல் பொருள் அறிவோம்’ என்ற தமிழ்ச் சொற்களைப் பற்றிய இவரது நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. படித்த இலக்கியம், கேட்ட திரைப்பாடல்கள், மனம் கண்டு கொண்ட தரிசனங்கள் என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு இவரது நான்காவது நூலான ‘நினைவின் நீரோட்டம்’.
Be the first to rate this book.