ஒரு தமிழ் வெகுஜனச் செய்தி இதழின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றிய வாஸந்தி, பெங்களூரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் வரை தமிழகத்தில் அவர் வாழ்ந்ததில்லை. ஒரு படைப்பாளியின் அனுபவத் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகளில் ஒரு முக்கியமான அம்சம், ஒரு தமிழ்ப் பெண்ணுக்குத் ‘தமிழ் மண் தந்த கலாச்சார அதிர்வுகள்.’ தமிழ்ப் பண்பாட்டோடு உணர்வு ரீதியான நெருக்கமும் வாழ்க்கைப் பார்வையால் ஏற்பட்ட முரண்களும் இழையோடும் இப்பதிவுகளில் வாஸந்தியின் பெண்ணியப் பார்வையும் தேசிய இடதுசாரிக் கருத்தியலும் துலக்கமாக வெளிப்படுகின்றன. அத்தலைமுறையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களுக்கு அதிகம் வாய்த்திராத அனுபவங்கள் செழித்த வாழ்க்கை வாஸந்தியினுடையது. அவற்றை உணர்ச்சிகளும் வண்ணங்களும் பொருந்திய தமிழ் நடையில் அன்யோன்யமாகப் பகிர்ந்துகொள்கிறார்.
Be the first to rate this book.