கிராமத்து வாழ்க்கை எப்போதுமே சுகமான, சுவையான அனுபவங்களைத் தரும். அதிலும் 70-80களின் வாழ்க்கைமுறை இனிமையானதாக இருந்திருக்கும். ஏனென்றால், இன்றைக்கு வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தை எல்லாம் பேஸ்புக்கும், வாட்ஸ்அப்பும் இன்ன பிற சமூக வலைதளங்களும் எடுத்துக்கொள்கின்றன. ஆனால், கிராமத்தில் வாழ்ந்த சிறுவர்களின் பொழுதுபோக்கு ஆரோக்கியமாகவும் அழகானதாகவும் இருந்தது. பழைய சைக்கிள் டயரை குச்சியால் தள்ளிக்கொண்டு போவது, ஊர் திருவிழாக்கள் தரும் இனிமையான, சுவாரஸ்ய அனுபவங்கள், வானொலியில் பாடல் கேட்பது என அந்த வாழ்க்கை அந்தக் கால சிறுவர்களுக்கு அலாதியாக இருந்தது. சின்ன விஷயத்தையும் சுவாரஸ்யம் கூட்டிச் சொல்லும் நண்பன், முதன்முதலாக ரயில் பார்த்தது, செக்கு மரத்தில் அமர்ந்து சுற்றிச் சுற்றி வந்தது... இப்படி தன் சிறு வயது அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார் நூலாசிரியர். இவர் சொல்லியுள்ள அனுபவங்கள் அனைத்தும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். மொத்தத்தில், ஆழ்மனதில் படிந்திருக்கும் பால்யகால அனுபவங்களை அசைபோடவைக்கும் நூல் இது!
Be the first to rate this book.