கடலின் இசை
கடற்கரையில் விளையாடும் அலை கடலின்
இசையை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,
அதன் வினோதமான, ஆழமான, புதிரான மெல்லிய இசை
மனித ஆன்மாவின் குரலாக ஒலிக்கும்.
கட்டுப்படுத்த இயலாமல் வெறிகொண்டு கரும்பாறையில் மோதும் போது
உள்ளத்தின் வெறியுணர்வை அது பாடுகின்றது;
அதைத் தொடர்ந்து துக்கத்துடன் உள்வாங்கி செல்வது
தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு வருந்துவதாக கேட்கின்றது.
ஓசையின்றி ஆழ்ந்த இரங்கலுடன் சலசலப்பு இன்றி பாயும் போது
வீரமான உயிர் தியாகத்தையும் மௌனமான வலிகளையும் அது பேசும் ;
பாறைகளை உடைக்கும் போது
மனித ஆன்மாவின் ஆர்ப்பரிப்பாக அது வீசும்
Be the first to rate this book.