“பாலஸ்தீனத்தில் தங்களின் கட்டை விரலை எடுத்து வைத்த யூதர்கள் எப்படி மெல்ல மெல்ல தங்களின் கால், கை, உடல் என மொத்த நிலத்தையும் ஆக்கிரமித்து அந்த நிலத்தின் பூர்வகுடியான பாலஸ்தீன மக்களை அதனை சுற்றிய நாடுகளுக்கு விரட்டி அகதிகளாக மாற்றியிருக்கிறார்கள், சொந்த நாட்டில் எஞ்சி வாழுகிறவர்களும் அகதிகளாகவே உரிமையற்றவர்களாக ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள் என்பதை உணர வைக்கும் நூல்.
இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் நேரம் என் மனதில் அரபு நாடுகள், மத்திய தரைக்கடல் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமையின்மை தான் இந்த பிரச்சனை இத்தனை பெரும் வரலாற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு வழிவகுத்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் முழுமையிலும் இருக்கும் குடிமை சமூகத்தில் ஜனநாயகம் வராத வரை பாலஸ்தீனத்திற்கு ஆதரவான எளிய மக்களின் குரல் அங்கிருந்து ஒரு போதும் வெளி உலகின் காதுகளை எட்டாது.”
- அ.முத்துக்கிருஷ்ணன், முன்னுரையிலிருந்து..
Be the first to rate this book.