துயரத்தின் வடிவம் ஒப்பாரியாகத்தான் இருக்க வேண்டுமென்றுமில்லை. மனதில் உறைந்துபோன கண்ணீரின் பாறைகளாகவும் இருக்கக்கூடும். சந்திராவின் கதைகள் சுமந்திருக்கும் துயரம் இரண்டாவது வகை சார்ந்தது. ஒரு பெருங்கடலின் சீற்றமான பேரலைகளாக இவை இல்லாமல் கரையோரம் மெல்ல வந்து தன் ரகசியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி மீள்கின்ற சிற்றலைகள்போல் வெளிப்படுகின்றன. தன் துயரம்பற்றி மட்டும் பேசாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பங்கண்டும் அது பேசமுயல்கின்றது.
சந்திராவின் கதைகளில் அடக்கமான தொனியும் உண்மையின் ஒளியும் கலைத் தரமும் புலனாகும். முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவருடைய எழுத்துகளில் தென்படும் நேர்மை.
Be the first to rate this book.