இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்?
சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குப் பிற அரபு தேசங்கள் ஏன் கைகொடுப்பதில்லை? மத்தியக் கிழக்கின் வளமையும் செழுமையும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் ஏன் எப்போதுமே இல்லாமல் போகிறது?
ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்?
பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது. யாசிர் அரஃபாத்தின் ஆயுதப் போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள், இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டம், உலக நாடுகளின் கருத்துகள் என்று விரிவான களப்பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக எழுதப்பட்ட நூல் இது.
5 நிலமெல்லாம் ரத்தம் - ஒரு நிலப்பரப்பின் 2000 வருட ரத்த சரித்திரம் .
கிட்டத்தட்ட 700 பக்கங்கள் கொண்ட இந்த கட்டுரை தொகுப்பானது இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் ரத்தம் படிந்த வரலாறை சொல்லும் புத்தகம் கிட்டத்தட்ட மத்திய கிழக்கு பகுதிகளில் நடைபெறும் சம்பவங்களை வெறும் செய்தியாக கடந்து சென்றிருப்போம். ஆனால் இந்த சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் சரித்திரம் என்பது அவ்வளவு நீளமானது அதோடு மட்டுமில்லாமல் கொடுமையானது கூட. உண்மையில் யூதர்கள் என்பவர்கள் யார் அரேபியர்கள் என்பவர்கள் யார் இஸ்ரேல் என்ற நாடு எப்படி உருவானது அந்த நாடு உருவாவதற்கு முன்பு அது யாருக்கு சொந்தமாக இருந்தது. ஏன் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்ற இருநாடுகள் உருவாகின அதற்கு காரணமாக அமைந்தது எது. சொந்த மண்ணில் அகதிகள் போல் வாழ்ந்து வரும் பாலஸ்தீனியர்களை ஏன் மற்ற அரபு தேசங்கள் உதவ முன்வருவதில்லை போன்ற கேள்விகளுக்கு பதில்களை இந்த புத்தகத்தில் காணமுடியும். இந்த புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடியும் முதலாவது காலகட்டம் என்பது கிபி பத்தாம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டம். அடுத்த காலகட்டம் என்பது பத்தாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டம். அடுத்த பகுதி தற்போது இருபதாம் நூற்றாண்டு தொடங்கி தற்போது வரை உள்ள காலகட்டம். இந்த கால கட்டங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களை ஆதாரங்களுடன் ஆசிரியர் முன்வைக்கிறார். குறிப்பாக இஸ்ரேல் என்ற இனத்திற்கும் அரேபியர்கள் என்ற இனத்திற்கும் எந்த இடத்திலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிறது என்பதில் தொடங்கி தற்போதைய நிலை என்ன அதுவரை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
BHOJAN 03-11-2021 12:54 pm