முன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல, சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.
இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தமிழுடன் தோய்வும் பரிச்சயமும் உடைய எந்த வாசகனாலும் இந்த நாவலை சிரமமின்றிப் படித்துச் செல்ல இயலும்.
இந்நாவலை வாசிக்கும்போது மனோஜ் குரூரின் பழந்தமிழ் இலக்கியப் புலமை வியப்பளிக்கிறது. சற்றுத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால், மலையாள மொழி பேசும் எழுத்தாளர் எழுதிய தமிழ் நாவலை வாசிப்பது போல் நீரோட்டமாக இருக்கிறது.
வழக்கமாக, மொழிமாற்றம் பெற்று வரும் இலக்கிய வடிவங்களை வாசிக்கும்போது தோன்றும் சிலிர்ப்பும் வறட்டுத் தன்மையும் கட்டுரைத்தனமும் தோன்றாவண்ணம் மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ.
- நாஞ்சில் நாடன்
Be the first to rate this book.