இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்பார்க்கிறான். அதிலிருந்து விடுபட்டு இவ்வுலகம் பெரியது. அழகானது, இயற்கையின் ஒரு அங்கமாகவே மனிதனுமிருக்கிறான், என்பதைப் பயணமே கற்றுத்தருகிறது. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது. அதற்குப் பயணமே முதற்படி. ஜப்பான் மற்றும் அமெரிக்கப் பயணத்தின் வழியே எஸ்ரா அடைந்த அனுபவங்களை தனது வசீகர எழுத்தின் வழியே நம்மையும் அனுபவிக்கச் செய்கிறார் என்பதே இந்நூலின் தனித்துவம் இந்நூல் ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது. புல்லினும் சிறியது ஆகிய இரண்டு சிறுநூல்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு.
Be the first to rate this book.