டாக்டர் குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம் ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப் பிரதியைக் கண்டவுடன் நான் அதிலென்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். முதல் பகுதியிலேயே என் ஆர்வத்தை நிறைவு செய்ததுடன் என்னை சிறிதும் களைப்படைய செய்யாமல் மாறாக நல்ல பயன் தந்து இறுதிவரை இட்டுச் சென்றது.
- எம். கே. காந்தி
ஊரக மேம்பாட்டின் குறியீடு என்பது, சாலைகள் அமைப்பதோ கிணறுகள் தோண்டுவதோ வேதியுரங்கள் வழங்குவதோ அல்ல, திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு சில ஏழை உழவர்களை அழைத்து அவர்களது விலா எலும்புகளை எண்ண வேண்டும், திட்டங்களை செயல்படுத்திய பின்னர் அவர்களை மீண்டும் அழைத்து அவர்களது விலா எலும்புகளை மூடும் படியான சதை வளர்ந்து இருக்குமேயானால் அதுதான் திட்டத்தின் உண்மையான வெற்றி.
- ஜே. சி. குமரப்பா
நிலைத்த பொருளாதாரம் என்னும் முற்போக்கு சிந்தனை நூல், ஜே.சி.குமரப்பாவின் சிறைப்படைப்பு. இயந்திர மயமாதல், முதலாளித்துவம், உலக மயமாதல் என்னும் செயல்பாடுகள் வேகமாக பரவிய போது, அதை கேள்விகளுக்கு உட்படுத்தி, அதன் எதிர்கால தாக்கம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். பன்மயம் என்பது மாறி, ஒருமயமாகும் போது ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து, காந்தியின், கிராம பொருளாதாரத்தின் நன்மைகளையும் அலசுகிறது. இக்காலத்திற்கு அவசியமான நூல்.
Be the first to rate this book.