சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம். தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், பாதிப்புகள் தரக்கூடிய களைகள் முளைத்த வண்ணமே உள்ளன. இதிலிருந்து முழுவதுமாய் மீள வேண்டுமானால், அனைவருக்கும் போதிய விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். ஆனால், மளிகைக் கடை முதல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வரை இன்று சமுதாயத்தைச் சீரழிக்கும் வேலைகளில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள், பாலிலே கலந்த விஷம் போன்று வெறும் பார்வையால் கண்டறியாதபடி விரவிக் கிடக்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து, முகத்திரையைக் கிழித்து, அனைவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் 'ஜூனியர் விகடன்' இதழில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. 'ஸ்பெஷல் ஸ்டோரி' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Be the first to rate this book.