இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கு வெள்ளையர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்திலிருந்தே (18ஆம் நூற்றாண்டு) நடைபெற்றுள்ளதையே கான்சாகிபு அவர்களின் வீரவரலாறு நமக்கு சான்று பகிர்கிறது,
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மைசூர் மாவீரன் திப்பு சுல்தான், அவருடைய தந்தை ஹைதர் அலி அவர்களுடன் கான்சாகிபு அவர்களும் சரிசமமாக இடம் பெறத்தக்கவர்.
கான் சாகிபு நூறு ஆண்டுகள் வாழ்ந்தவரல்ல. ஒரு தரவின்படி அவரது காலம் 1725 முதல் 1764 வரை. அதாவது சற்றேறக்குறைய 39 ஆண்டுகளே.
நூலாசிரியரின் தரவுகள் அனைத்தும் யாரும் மறுக்கவியலாத ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது க்ரோனாலஜி எனும் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
3 Good History Book
இந்த புத்தகம் கண்டிப்பாக வரலாற்றை மீண்டும் கண் முன்னே கொண்டு வரும் மேலும் பல புத்தகத்தின் அடிப்படையில் எழுதபடுள்ளது அனைவரும் படித்து பயன் பெற வேண்டும்
Mohamed Rafee A 23-02-2022 10:07 pm