பிரடெரிக் நீட்ஷேயின் தத்துவம் அவர் வாழ்ந்த காலத்தில் அநேகமாக, முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை, 1889இல் திடீரென முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, ஆச்சரியப்படத்தக்க வகையில், வெவ்வேறு தரப்பிலான மக்கள் பிரிவினரும் அவரைப் பேருருவாக ஏற்றனர். நீட்ஷேயின் சிந்தனையைப் பற்றிய அவர்களுடைய விளக்கங்கள், சற்றும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத தன்மையிலிருந்து திட்டவட்டமான பகுப்பாய்வு வரை பரந்துபட்டன.
நீட்ஷேயின் விநோதமும் அறிவுமொழியும் எப்போதுமே ஈர்க்கக் கூடியவை; ஆர்வமூட்டக்கூடியவை; மிக எளிதில் அதில் ஆழ்ந்து போகத் தூண்டக்கூடியவை. இந்தத் தத்துவவாதியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த, வாசிப்பிற்குகந்த மிசேல் டேனரின் இந்த அறிமுகம், அவருடைய எழுத்துகளில் பொதிந்திருக்கிற எண்ணற்ற தெளிவின்மைகளைப் பரிசீலிக்கிறது. மேலும், ‘எல்லா வற்றுக்கும் மேலாக, நான் சொல்லாததை முன்வைத்து என்னைக் குழப்ப வேண்டாம்’ என்று நீட்ஷேயே தீர்க்கதரிசனமாக எழுதிய தற்குப் பின்னான நூறு ஆண்டுகளில் வளர்த்தெடுக்கப்பட்ட பல தவறான கருத்தாக்கங்களையும் இது வலுவாக வெளிப்படுத்துகிறது.
Be the first to rate this book.