நிக்கின் வாழ்க்கை நமக்கெல்லாம் தரப்பட்டிருக்கும் வாழ்க்கைப் பாடம். ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதை நோக்கிய பயணத்தை நம்பிக்கையோடு தொடரவேண்டும். அந்த நம்பிக்கைக்கு இறைவனில் சரணடையும் மனநிலையும் இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது அவருடைய வாழ்க்கை.
சின்னச் சின்ன குறைபாடுகளுக்கே முடங்கிவிடுகின்ற நமக்கு கைகள், கால்கள் இல்லாத நிக்கின் வாழ்க்கை சவால் விடுக்கிறது. எதையும் தாண்டி வெற்றிகளைத் தொடலாம், நம்பிக்கை இருந்தால் போதும் என்பதை அவருடைய வாழ்க்கை சொல்லிச் செல்கிறது. நாற்பது நாடுகள், நாற்பது இலட்சம் மக்கள் என அவருடைய பயணம் விஸ்தாரமானது. இன்னும் முப்பது வயதைக் கூடத் தொடாத நிக், இறைவன் மனது வைத்தால் இன்னும் பல கோடி மக்களைத் தொடுவார் என்பதில் ஐயமில்லை.
அவருடைய வீடியோக்கள் இன்றைக்கு பெரிய பெரிய நிறுவனங்களில் மக்களை உற்சாகப் படுத்தப் பயன்படுகிறது. மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைத் துடைத்தெறிய உதவுகிறது. தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என அவர்களைப் பக்குவப்படுத்துகிறது. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதைப் போதிக்கிறது. விடா முயற்சி எவ்வளவு முக்கியமானது என்பதை உரத்துச் சொல்கிறது !
இறைவனை நேசி, மனிதனை நேசி எனும் இரட்டை சிந்தனையில் அவருடைய வாழ்க்கை கட்டமைக்கபட்டுள்ளது !
நிக்கின் வாழ்க்கை நமக்கான பாடம் !
வாழ்க்கை அழகானது, அதை வாழத் தெரிந்தவர்களுக்கு ! என்பதே நிக் உங்களுக்கும் எனக்கும் சொல்லும் புதிய தத்துவம் !
Be the first to rate this book.