கதைகளின் வழியே ஒரு காலத்தை நிகழ்த்திக் காட்டுவதன் மூலம் நுட்பமான புதிர்கள் கொண்ட, பெண்களின் அக உணர்வோடும் அதில் வெளிப்படும் வெவ்வேறு அடுக்குகளோடும் நெருங்கிப் பயணிக்கின்ற, மெய்நிகர் அரங்காக இந்தத் தொகுப்பை அணுக இயலும். தாளமுடியாத ரகசியங்களோடு வலம் வருகின்ற மனித மனங்கள் செய்யத் துணிவதற்கும், தயங்குவதற்குமான ரகசியப் புள்ளியை, ஊடறுத்துப் போகிற இந்தக் கதைகள் ஈர்ப்பையும், கள்ளத்தனத்தோடு கூடிய பதைப்பையும் ஒருசேரக் கடத்துகின்றன.. இது கத்தி மேல் நடக்கும் ரமேஷ் ரக்சனின் இன்னுமொரு தொகுப்பு.
- ஜீவ கரிகாலன்
Be the first to rate this book.