மனதில் தோன்றுவனவற்றை எழுத்திற்குக் கொண்டுவர இங்கே எத்தனைபேரால் முடியும். இலக்கிய செயல்பாட்டின் அழகை எழுதுகிறவரும் வாசிக்கிறவரும் மட்டுமே உணரமுடியும். பணத்தையும் இடத்தையும் கட்டிக்கொண்டு அழுகிற மனித சமூகத்தில் கதையையும் கவிதையையும் காதலிக்கிற மனதின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எழுதுவதும் வாசிப்பதும் பிறர் மீது அன்பு வைத்தலின் இன்னோர் வடிவம். பிறர் மீது அன்பு வைக்கிறவர் இதயம் மட்டுமே இப் பூமியில் அழகான இதயம். அப்படி ஓர் அழகிய இதயமுடையவர்தான் கவிஞர் பகத் குருதேவ். இயற்கையின் பிரியர். வாழ்வின் மோசமான சுழற்சியிலும் தன் பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டுச் சமூகத்துக்காகச் சிந்திக்கிற இளைஞன்.
Be the first to rate this book.