கண்ணெதிரே வழிந்தோடினாலும் அதை பத்திரப்படுத்தவோ பாதுகாக்கவோ இயலாத துக்கத்திற்கு இதைவிட ஆகச்சிறந்த உதாரணத்தைச் சொல்லமுடியுமா என்ன? இதே தொனியில் அமைந்த இரண்டு கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒன்று, `உராய்வில் உலவும் உலகு’ மற்றொன்று,`நேசப் பெருவிசை’. இரண்டு கவிதையிலும் அன்பின் பொருமல்கள் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன.
கணநேர செளந்தர்யங்களை வழங்கும் காதலுக்கு, கண்ணீரையும் வாழ்வையும் செலவழிக்கும் மனிதமே மகத்துவமானது. என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் என நொந்துகொள்ளாமல், என்னதான் இருக்கிறது இந்த வாழ்க்கையில் என ஆராய்ந்துபார்க்கும் ஆர்வத்துடன் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன என எண்ணுகிறேன். வடிவ நேர்த்தியைவிட, தமிழியின் கவிதைகளில் வார்க்கப்பட்டுள்ள உணர்வுகள் எனக்கு உயர்ந்ததாகப் படுகின்றன.
- யுகபாரதி
Be the first to rate this book.