சாதுக்கள் அனைவரும் முக்தி அடைவதற்காக, கங்கையில் மூழ்கி செத்துவிட விரும்புவார்கள். ஆனால், துறவி நிகமானந்தாவும் அவர்தம் வழித்தோன்றல்கள் மட்டும்தான் கங்கை செத்துவிடக்கூடாது என்பதற்காகப் பட்டினிகிடந்து செத்துப்போனார்கள். இப்பவரை செத்து வருகிறார்கள்.
கங்கையின் அழுகை அவர்களின் கண்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்திய தேசத்தின் மிகமுக்கிய இரத்தநாளமாய் நீர்க்குருதி பாய்ச்சும் கங்கையாற்றை காப்பாற்றுவதற்காகத் தன்னை உள்ளொடுக்கி உயிர்நீத்தவனின், கண்களுதிர்த்த கடைசிச்சொட்டுகள் நமக்காக அன்றி யாருக்காக? தண்ணீரில் தோன்றியது பூமியின் முதலுயிர். ஆக, நீரே என்றும் உயிர்மூலம். நீரெல்லாம் கங்கையென்பது இந்தியத் தொல்வாக்கு.
நம் தொண்டைக்குழியில் இறங்கும் ஒவ்வொரு மிடறு தண்ணீருக்குள்ளும், நிகமானந்தா போன்ற நிறைய தியாகவாதிகளின் வாழாத ஆயுளும் கரைந்திருக்கிறது. நாள்தவறாமல் நினைத்துத் தொழவேண்டிய நன்றிக்கடன் நம்மனைவருக்கும் இருக்கிறது.
தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளியின் வெளியீடாக… தண்ணீருக்காகச் உயிர்துறந்நவர்களின் வாழ்வுக்கதையாக “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” எனும் இப்புத்தகம் எழுத்துமலர்கிறது.
Be the first to rate this book.