கடந்த நான்காண்டுகளாக அ. மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோது அவ்வியக்கம் சார்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையும் பின்னிணைக்கப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துச் சட்டம், போதைப் பொருட்கள் சட்டம், குண்டர் சட்டம் முதலான பல சட்டங்கள் கைவசம் இருந்த போதிலும் இத்தகைய அசாதாரனச் சிறப்பு அதிகாரச் சட்டங்களின் மூலமே அரசுகள் மக்கள் மீதான தமது அதிகாரத்தை எல்லையில்லாததாக்கக் கொள்கின்றன. அரசுகள் அதிகாரத்தை இவ்வாறு பெருக்கிக் கொள்வதன் மூலம் தனது ஜனநாயகத் தன்மையை இழக்கின்றன.
Be the first to rate this book.