இன்றைய அதிநவீன உலகம் அறிவியல் தொழில்-நுட்பத்தில் பெருமளவு முன்னேறி வருகிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை-யும் மாறுதல்களையும் ஏற்படுத்தி வருகின்றன. தனிமனித வருமானம் அதிகரித்து வருகிறது. பணமும் வசதி வாய்ப்பு-களும் மனித வாழ்வை சொகுசானதாக ஆக்கியுள்ளன.
ஆனால், இத்தனை வசதிகளையும் பெற்ற பிறகும்கூட மனிதன் ஏதோவொன்றைத் தொலைத்துவிட்டு நிற்கின்றான். அதைத் தேடித் தேடி அங்கும் இங்கும் திரிகின்றான். அவனது கால்கள் ஓய்ந்ததே தவிர அதனைக் கண்டெடுக்க முடிய-வில்லை. அது என்ன? அதுதான் மனஅமைதி.
அமைதியான, மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு இன்று அரிதாகிக் கொண்டே வருகிறது. எத்தனை எத்தனை பிரச்னைகள் நாள்தோறும் வெடிக்கின்றன? அதற்கான தீர்வு எதுவும் இன்றி, மனஅமைதி இழந்து மனிதர்கள் தவித்து வருகின்றனர்.
பணத்தால் அதனைப் பெற முடியாது. விஞ்ஞானம் அதனைப் பெற்றுத் தராது. பிறகு எவ்வாறு அது சாத்திய-மாகும்? இதனைத்தான் நெஞ்சுக்கு நிம்மதி என்கிற இந்நூல் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மனஅமைதியைத் தேடியலையும் உள்ளங்கள் இதனைக் கட்டாயம் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் நூலகங்களிலும் அவசியம் இந்நூல் இடம்பெற வேண்டும் என்பது எங்களின் வேணவா.
Be the first to rate this book.