நெல், வாழைப் பயிர்களின் சாகுபடி காலங்கள், பூச்சிகள், நோய்த் தாக்குதல், நீர் மேலாண்மை, அறுவடை - இவை குறித்த விவசாயிகளின் எண்ணற்ற சந்தேகங்களுக்கும், எந்தப் பட்டத்தில் விதைப்பது... பட்டத்துக்கேற்ற ரகங்கள் இருக்கின்றனவா... எந்தெந்த காலத்தில் என்னென்ன நோய்கள் தாக்கும்... இவற்றுக்கான விளக்கங்களைத் தரும் நூல் இது. ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ விதை நெல் தேவை என அறிந்து, விதையின் முளைப்புத் திறனைக் கண்டறிந்து அதில் தரமான நெல் விதையை தேர்வு செய்து, அது விதை நேர்த்தி செய்யப்பட்டதா என ஆராய்ந்து... ஒரு நெல் விதைப்பதற்கே பல படிநிலைகளை பொறுப்பாக செய்கிறார்கள் விவசாயிகள்.
இப்படி நேர்த்தியாக வயலில் பயிரை விளைவிப்பதன் மூலம் நல்ல தரமான நெல்லில் இருந்து அரிசி நமக்குக் கிடைக்கிறது. `விதைகள் மூலமாக பரவக்கூடிய பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைப்பதற்கும், விதைகளின் முளைப்புத் திறனை அதிகப்படுத்தவும் விதை நேர்த்தி முறை உதவும். விதைநேர்த்தி செய்தால், ‘குலைநோய்’ தாக்காது. நெல் வயலுக்குக் கண்டிப்பாக ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும்... ‘மெத்தைலோ பாக்டீரியா’வைப் பயன்படுத்தி வாடும் பயிர்களைக் காப்பாற்ற முடியும். இந்த பாக்டீரியாவைத் தெளித்தால், இலைகளில் உள்ள பச்சையம் தக்க வைக்கப்படுகிறது.'
இதுபோன்ற அரிய தகவல்களை விவசாயிகளின் கேள்வி-பதில் மூலம் வயல்வெளிப் பள்ளி நேர்த்தியாகக் கற்றுக் கொடுக்கிறது. பசுமை விகடனில் தொடராக வெளிவந்த வயல்வெளிப் பள்ளி, நூலாக்கம் பெற்று விவசாயிகளின் சந்தேகத்தைத் தீர்க்கக் காத்திருக்கிறது. நெல் மற்றும் வாழை வேளாண் விவசாயிகள் வளமான விவசாயத்தை செய்திட இந்த நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்!
Be the first to rate this book.