தன் வாழ்நாளில் மிகவும் போற்றப்பட்டவரும், மரணத்துக்குப்பின் அதிக அளவில் விமர்சிக்கப் படுபவருமான நேரு என்ற மாமனிதரின் ராஜதந்திர அணுகுமுறையை விரிவாக அலசும் புத்தகம் இது.
வாழும் காலத்தில் மிகையாகத் துதிக்கப்பட்ட நேருவின் சாதனைகள் அவரது மரணத்துக்குப்பின் குறைத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. பொதுவெளியிலும் அரசியல் வெளியிலும் நேரு தூற்றப்படுவதைப் பார்க்க முடிகிறது.
அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகள்மீது பார்வையைக் குவித்து, ஆதாரபூர்வமான வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் நேருவை எவ்விதச் சாய்வும் இன்றி அணுகுகிறார் ரமணன். நேரு எனும் மகத்தான மக்கள் தலைவரை, அவருடைய பலவீனங்களுடன் சேர்த்துப் புரிந்துகொள்ள முயல்கிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.