இந்தியா சுதந்தரம் அடைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு இந்தியா என்றால் அது ஜவாஹர்லால் நேருதான். இந்தியாவின் சாதனைகள், குறைபாடுகள், ஏழைமை, வளர்ச்சி, ஐந்தாண்டுத் திட்டங்கள், அயலுறவுக் கொள்கை என்று அனைத்திலும் நேருவே பிரதிபலித்தார். அவருடைய பலமும் பலவீனமும் இந்தியாவின் பலமும் பலவீனமுமாக இருந்தன.
இன்று இந்தியா பெருமளவில் உருமாறிவிட்டது என்றாலும் நேருவின் லட்சியமும் அணுகுமுறையும் இன்றும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பதை இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகளான நயன்தாரா சகல் தனது தாத்தா
குறித்துத் தீட்டியிருக்கும் சித்திரம் பயனுள்ளதாகவும் ஆச்சரியமூட்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, நேருவின் அணிசேராக் கொள்கை உருவான பின்னணி குறித்தும் இதையே அடிப்படையாகக் கொண்டு நேரு வகுத்துக்கொண்ட சர்வதேச அரசியல் உறவுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தோனேஷியா, வியத்நாம் ஆகிய நாடுகளை நேரு எவ்வாறு அணுகினார், இந் நாடுகளுடன் எத்தகைய பரிமாற்றங்களைக் கொண்டிருந்தார் என்பதை நேரு மற்றும் பிற தலைவர்களின் பிரத்தியேக ஆவணங்களிலிருந்து மேற்கோள் காட்டித் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர்.
நான், என் நாடு, என் மக்கள் போன்ற குறுகிய எல்லைகளைத் தகர்த் தெறிந்து ஒட்டுமொத்த உலகின் பிரச்னைகள் குறித்துத் தெளிவாகச் சிந்தித்து, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட ஓர் அதிசய மனிதா¤ன் கதை இது.
Be the first to rate this book.