இந்திய அரசியல் அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரும் இப்படியொரு புத்தகத்தை எழுதினால் சமகாலச் சரித்திரம் பற்றிய நமது பார்வை மேலும் அகலமாகும்; ஆழமாகும். கிட்டத்தட்ட ஒரு கண்ணாடியாகவே மாறி தன் கால அரசியல் நிகழ்வுகளை இந்நூலில் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் ப.ஸ்ரீ. இராகவன்.
மத்திய அளவிலும் மாநில அளவிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த இராகவனின் பணிக்காலம் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. டிப் டாப்பான உடை. தலைமேல் சிவப்பு விளக்கு சுழல பவனி வரும் அரசு கார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் டவாலிப் பணியாளர். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் ஒவ்வொருவருக்கும் எழும் பிம்பம் இதுதான். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் இல்லையென்றால் அரசு என்கிற இயந்திரம் சீராகச் சுழல முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்விக் குறி.
உண்மையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் கடமை என்ன? அவர் என்ன வேலை பார்க்கிறார்? அவருடைய பொறுப்புகள் என்ன என்பதையெல்லாம் யாரும் யோசிப்பதுகூடக் கிடையாது. இந்நூலில் இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்களுக்கு நேரும் சிக்கல்களை, பிரச்னைகளை மிக அழகாகத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் மூலமாகச் சுட்டிக் காட்டுகிறார் இராகவன். இந்நூல் நேருவையும், லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் முற்றிலும் புதிய கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது.
Be the first to rate this book.