கதைகள் சமூகத்தின் பேசு பொருள்.. கதை மொழி என்பது நாம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் ஆகும். தாயின் மடியில் இருந்து கதை கேட்கும் வழமையில் வளர்ந்தோம். அதுவே கதை சொல்லும் முயற்சிக்கும் துவக்கம்.
கதைக்கு இலக்கணமோ மொழி உயர் நடையோ தேவை இல்லை..கேட்க வைக்கும் சுவாரஸ்யத்தில் , சூழ்நிலையை ரசிக்க வைக்கும் எண்ண அலைகளில் அந்த வழியில் கதை சொல்ல பேனாக்களோடு
செல்ல சண்டை போட்டு இருக்கின்றேன்.
சமரசம், அல் ஹஸனாத் மற்றும் இலங்கை சஞ்சிகைகளில் முத்திரை சிறுகதைகளாக வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பே இந்த நூல் ஆகும்.
ஒன்பது வயது படிக்கின்ற எகிப்து சிறுமி மற்றும் படிக்க இயலாத சோமாலிய சிறுமி இவர்களின் நட்பைப் பின்புலமாக வைத்து ஸ்கூல் வாசலை சுற்றிப் பின்னப்பட்டக் கதை- "நீக்ரோ தேவதை".
பாலஸ்தீன பள்ளிக்கூடச் சிறுவர்களின் வாழ்வியல் உணர்வின் போராட்ட நிலை சொல்லும் யதார்த்த கதை- "இரத்த நதி".
சென்னையின் அழுக்கு மனிதர்களின் வெள்ளை மனது வாழ்க்கை பற்றியதும் அடக்குமுறை சமூகத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்ற ஒரு தமிழன் இஸ்லாமியர்களை பார்க்கும் பார்வை பற்றிய கதை - "தேடப்படாத முகவரி".
அடிமைக் கல்வியின் மூலம் ஆப்கானிய கலாசாரத்தை மாற்ற நினைக்கும் கலாநிதியான தந்தைக்கும்,
படிப்பு வராத 5 ஆம் வகுப்பு படிக்கும் தன்பிள்ளைக்கும் நடக்கும் சம்பவங்களை எழுத்துக்களால்
சொல்லப்பட்ட கதை - "அழகான கோபம் நீ".
எகிப்து நாட்டில் ராபியா சதுக்கத்தில் இஃவான்களுக்கு எதிராக நடந்த அடக்குமுறையை மையமாக வைத்து அந்த போராட்டச் சூழல் பின்புலத்தில் தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி எழுதிய கதை
- "யுத்த யாத்திரை".
-அபூ ஷேக் முஹம்மத்
Be the first to rate this book.