பகவத் கீதையை ஒரு முறை படித்தாலோ, ஒரு முறை விளக்க உரை சொல்லக் கேட்டாலோ புரிந்து கொண்டு விட முடியாது. தினமும் பாராயணம் செய்யப்பட வேண்டிய பக்திப் பொக்கிஷம் அது. அதையும் ஒரே மூச்சில் படித்துவிடாமல், தினமும் துளித்துளியாகப் பருக வேண்டிய அமிர்தம் அது. கீதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுத் தெளிவும் வைராக்கியமும் ஏற்படுவதை உணரமுடியும். அதேபோல், கீதை குறித்த தொடர் சொற்பொழிவுகளை பல தடவை கேட்கும்போதுதான், அதன் உட்பொருள் விளங்கும். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் சந்தேகங்கள், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியவை. அவனுக்கு தேரோட்டியான கிருஷ்ண பகவான் அளிக்கும் விளக்கங்கள், நம் எல்லோருக்கும் தெளிவு ஏற்படுத்தக் கூடியவை. அரும்பெரும் தத்துவங்களை ஆரம்ப வகுப்பு மாணவனுக்குப் புரிய வைப்பதுபோல், படிப்படியாக பதினெட்டு அத்தியாயங்களில் விளக்குவார் கிருஷ்ணர். நீயும் ஒரு அர்ஜுனன்தான் என்ற தலைப்பில், சக்தி விகடன் இதழில் இளைஞர் சக்தி பகுதியில் சுவாமி சந்தீப் சைதன்யா எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
Be the first to rate this book.