நிதானனுக்கும், கிளிக்குட்டிக்குமான உரையாடல்களின் தொகுப்பு. அவ்வுரையாடலின் வடிவம் கவிதையென அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காதலில் என்னென்ன உண்டோ? அவையனைத்தும் தான் 'நீயேதான் நிதானனைச் செய்தன.
கண்டு,கேட்டு,உய்த்து,உணர்ந்து, அறியக்கூடிய காதலை மொழியின் அனைத்து சாத்தியக் கூறுகளிலும் எழுதிப் பார்ப்பதே இக்கவிதைகளின் பொருண்மை. அவரவர் உள்ளிருக்கும் நிதானனையும் கிளிக்குட்டியையும் இக்கவிதைகளுக்குப் பின் தேடத் தொடங்குவதோ, மீளுருவாக்கம் செய்வதோ, கால இயந்திரப் பயணமோ வாய்த்து விடுகிறது வாசித்தவுடன், அவரவர் நல்லூழின்படி.
பரஸ்பரம் கிளிக்குட்டியும் நிதானனும் இக்கவிதைகளை ஒருவொருக்கொருவர் காதலாகப் பரிசளித்துக் கொள்ளலாம்.
- தேவசீமா
குறிப்பு -நீயேதான் நிதானன் கவிதை தொகுப்பு.. முற்றிலும் ஓரிகாமி வடிவில் செய்யபட்டது. இதற்கென்று தேவசீமா என்ற பெயரில் எழுத்துரு உருவாக்கபட்டு அந்த எழுத்துருவில் கொண்டு வரப்பட்ட தொகுப்பு.
Be the first to rate this book.