21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்குக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் இரு பெரும் தேசங்கள். இந்த இரண்டு தேசங்களின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்றைய காலகட்டம்வரை மிகத் துல்லியமாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
இன்று அமெரிக்கா எந்த அளவுக்கு உலகில் வலிமையுடன் திகழ்கிறதோ அதற்கு இணையாகப் பொருளாதாரரீதியில் இந்தியாவும் சீனாவும் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தில் இருந்திருக்கின்றன. காலனி ஆட்சி காலத்தில் வீழ்ச்சியை நோக்கிப் பயணித்த அவை இன்று தம்மைப் பிணைத்திருந்த சங்கிலிகளை உடைத்தெறிந்துவிட்டு முன்னேற ஆரம்பித்துள்ளன.
முயலைப் போல் சீனா அதிரடியாக முன்னேறிவிட்டது. ஆமை போல் நிதானமாக இந்தியா முன்னேறி வருகிறது. பந்தயம் முடியவில்லை.
சீனாவின் பலங்கள் என்னென்ன... பலவீனங்கள் என்னென்ன? இந்தியாவின் பலங்கள் என்னென்ன... பலவீனங்கள் என்னென்ன? என்று கல்வி, மருத்துவம், அரசியல், மின்சாரம், ரயில்வே, சமூகக் கட்டமைப்பு என ஒவ்வொரு துறையாக அக்கு வேறு ஆணிவேறாக அலசியிருக்கிறார் ஆசிரியர். இந்த நூற்றாண்டின் இணையற்ற போட்டியில் வெற்றி பெறப் போவது யார்? ஆமையா... முயலா?
Be the first to rate this book.