ஆள்கடத்தல்! பாலியல் அத்துமீறல்! அதிகாரத்தில் இருப்பவர்களின் அராஜகங்கள்! பணமோசடி! சட்டவிரோதத் தடைகள்! கிரைம் திரைப்படத்தின் கதைபோல் இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம்!
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் கேரளாமீது திரும்ப வைத்துள்ளது அண்மையில் வெளியான நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஹேமா தலைமையில் 3 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள், திரைப்படங்களில் வாய்ப்புகளுக்காக நடிகைகளுக்கு எழும் பாலுறவு அழைப்புகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளைப் பற்றி, சாட்சியங்கள் குழுவில் அளித்த திடுக்கிடும் தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இவை மட்டுமின்றி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பணிச்சூழல், கழிப்பறை வசதிகள் மற்றும் உடைமாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது, ஊதியத்தில் முறைகேடுகள் போன்ற பிற முக்கியமான பிரச்சினைகளையும் விரிவாக அலசும் அறிக்கையின் தமிழ் வடிவம் இந்தப் புத்தகம்.
கேரளா மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமான முதல் குரல் என்கிற அளவில் இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.
Be the first to rate this book.