உலகப் புகபெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான வேலூரிலுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்ற டாக்டர் பினாயக் சென் தனது வாழ்க்கையை, தனது மருத்துவ அறிவை சத்தீஸ்கர் பழங்குடி மக்களுக்காக அர்பணித்தவர். தனது வாழ்க்கையை தியாகம் செய்ததாக அவர் ஒருபோதும் கருதியதில்லை. மனிதர்களின் உடல் நலமும், அவர்களது சமூகப் பொருளாதார நிலையும் கொண்டுள்ள மிக நெருங்கிய உறவை அவர் தனது முதுகலைப் படிப்பின்போதே அறிந்துகொண்டார். மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமைகள் நிலைநாட்டப்படாமல் ஒரு சமூகத்தில் மருத்துவச் சேவை நிலைபெறுவது சாத்தியமல்ல என்பதை சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் மத்தியில் பணியாற்றியபோது அறிந்து கொண்டார். தனது சொந்த மக்கள் மீதே ஓர் அரசாங்கம் போர் தொடுப்பதை கேள்விக்குள்ளாக்கியபோது அவருக்கு இன்னல்கள் தொடங்கின, இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன . . .
‘‘பணக்காரனாக இருப்பதல்ல, புகழ்பெற்றவனாக இருப்பதல்ல, அதிகாரம் கொண்டவனாக இருப்பதல்ல, ஏன் மகிழ்ச்சியானவனாக இருப்பதுகூட அல்ல, பண்பட்ட மனிதனாக இருப்பதே அவனது வாழ்க்கையின் லட்சியம்’’ என்ற அமெரிக்க எழுத்தாளர் பிலிப் ராத்தின் வார்த்தைகளுக்கு வாழும் உதரணமாக இருக்கும் மனிதர் பினாயக். அவருக்கு சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் இழைத்த கொடுமையையும், அநீதியையும் அதற்கெதிராக உலகெங்கும் எழுந்த மக்கள் போராட்டங்களையும் விவரிக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.