ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர், கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன். புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது. சாரைப்பாம்பின் சரசரப்போடு கதை நகர்கிறது.
அதற்கு அவர் தோது பண்ணியிருக்கும் வார்த்தைகள் இயல்பான அவரது புழங்குமொழிதான். அந்த மொழியே கதைமாந்தர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நம்பகப்படுத்துகின்றன.
வெவ்வேறு ஆண் பருவத்தினரான மூவர் சுற்றிய கதை. அவர்களின் வாழ்வியல் நிலைகளை குறிப்பாக வெவ்வேறு பாலியல் களங்களில் காட்சிப்படுத்துகிறது.
கதையில் உலவும் பெண்களின் அபூர்வ வேட்கை பிரபு காளிதாஸின் எழுத்தில் காமலோகத்தை சித்திரப்படுத்தி மலைப்பூட்டுகிறது. மாறுபட்ட சூழலில் பிழைக்கவோ… தப்பிப்பிழைக்கவோ… ஓடிக்கொண்டிருக்கும் மூவரும் ஒன்றுகூடுவதுடன் கதை ஓரிடத்தில் நிலைபெறுகிறது.
Be the first to rate this book.