ஒரு ஐம்பது சொற்கூட்டங்கள் சேர்ந்து உண்டாக்கக்கூடிய உணர்ச்சியை, சுயம்புலிங்கத்தின் ஒரு சொல் உருவாக்கிவிடுகிறது. முன்னூற்றிச் சொச்சம் சொற்களுக்குள் ஒரு திடகாத்திரமான கதையை அவரால் படைத்துவிடவும் முடிகிறது. தவலைப் பானையின் குடிநீரைப் போல அந்தக் கதையின் ஒரு சொல்கூடத் தழும்பிச் சிதறுவதில்லை.
வர்க்கப் பாகுபாட்டில் கீழ்நிலையிலுள்ள ஒரு மனுஷியின் மனுஷனின் அன்றாடம்தான் இவரது கதைகளின் ஆதாரம். அவர்களின் அன்றாடத்திலிருந்து ஒரேயொரு சம்பவத்தை அதன் நெஞ்சுத் துடிப்புடன் எடுத்து கதையாக நம்முன் வைக்கிறார். அந்தச் சிறு சம்பவம் அந்த மனுஷர்களின் ஒரு ஜன்ம வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறது.
-மண்குதிரை
Be the first to rate this book.