இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் அவை வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பெருங்கால்வாய் வெட்டிய பெருமகன், தமிழரின் பெயர்வைக்கும் பழக்கம், காவிரியில் புத்தணைகள் கட்ட முடியாத காரணம், வரலாற்றின் உறைவிடங்களை நோக்கிய பயணங்கள், நீந்திப் பழகிய நீர்நிலை போன்ற பற்பல பொருள்களில் மனத்தோடு கொஞ்சும் மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையேயுள்ள நடுத்தடத்தில் நடந்து செல்லும் நடையில் எழுதப்பட்டவை.
பவானிசாகர் அணையுள்ள இடத்திற்கும் வெள்ளோட்டுக்கும் இடையில் இடையில் எழுபத்தைந்து கிலோமீட்டர்கள் தொலைவு. ஆனால், அவ்விரண்டு பகுதிகட்கும் இடையில் வெறும் முப்பத்தைந்து அடிகள் மட்டுமே சரிவு. ஒரு கிலோமீட்டருக்கு அரையடி மட்டுமே இறக்கம். எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அத்தகைய தட்டை நிலத்தின்மீது தண்ணீர்க் கால்வாய் வெட்டிய காளிங்கராயரைப் போற்றும் பெருங்கடமையுணர்ந்து வைக்கப்பட்ட நூல் தலைப்பு இஃது.
Be the first to rate this book.