பயணம்
நிழலை வெளியே வைத்துவிட்டு
கடைக்குள்ளே போய்விட்டேன்.
திரும்பி வரும்போது
மழையில் நனைந்தபடி நின்றது.
ஊர் வந்ததும் பஸ்ஸைவிட்டு இறங்கினேன்
எனக்கு பின்னால் என் நிழலையும்
இறக்கிவிட்டான் கன்டேக்டர்.
வீட்டுக்கு போகும் வழியில் இருக்கும்
மரத்துக்கு மறைந்தது என் நிழல்
வீட்டுக்குள் நுழைந்ததும்
என் நிழல் எங்கே என்று யாரும் கேட்கவில்லை.
மழையில் நனைந்தபடி நிற்கும் என்னை
தனது குடைக்குள் அழைத்துச் செல்கிறாள் அவள்.
- அஹமது பைசல்
Be the first to rate this book.