இயற்கை அறிஞர் திரு.மாதவ் காட்கில் முன்னுரையிலிருந்து...
2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மனிதத் தலையீடுகளால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகள், மக்களை மிகக் கடுமையாகத் தட்டி எழுப்பியுள்ளது. அதன்விளைவாக, மக்களுடைய மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல்வாதிகளைப் பதிலளித்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியுள்ளது. ஆகவே, மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் வல்லுநர் குழுவின் ஆய்வறிக்கையை விமர்சித்துக் கொண்டிருந்த அரசியல் தலைவர்களே இப்போது அதில் குறிப்பிட்ட எச்சரிக்கைகள்மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போதுள்ள நிலைமை, இந்த ஆய்வறிக்கையைத் தமிழ் மொழியில் கொண்டுவர வேண்டிய அவசியத்தை உண்டாக்கியுள்ளது.
Be the first to rate this book.