வைகையின் நீரடி மணற்துகள்கள் வெட்டுண்ட வாத்துக்கால்களால் சொற்களாகும் மாயம். நீர்மையின் சொப்பனங்களோடு வெடிப்புற்ற குளங்களின் கானல்வரிகளைத் தேடிக் கரைகளில் கண்ணீரை விதைகளாகப் பெற்ற கன்னிமார்களின் துணை இங்கே சொற்களுக்குள் இறங்கியிருக்கிறது.
- ச.முருகபூபதி
5 கனியில் மாதுளைகளை உதிர்த்துவுட்டு சேகரித்து கிழப் பற்களைப் பதித்து வழிபடுகிறேன்...!
நீர்ச்சுழி கவிதை தொகுப்பு எழுத்தாளர்: முத்துராசா குமார் வெளியீடு: சால்ட் & தன்னறம் விலை:150 கவிதை வாசிப்பு கால இயந்திரத்தில் பயணம் செய்வது போல்.எழுதியவனின் மனவெளி காட்சிகளை தொட்டு உணரும் அனுபவத்தை தரவேண்டும்.....என்பது எனது ஆசை....! நான் காணது கடந்த இயற்க்கையின் அற்புதங்களை,அபத்தங்களை இரண்டு அடி பின்வந்து கவணிக்க வைக்கும் ஈர்ப்புவிசை ராசாவின் இந்த கவிதை தொகுப்பு முழுவதும் நிரம்பியிருக்கிறது.....! எழுத்தின் வழியாக கிரமவாழ்க்கையை,இடங்களின் அழகிய இதயங்களை புகைப்படம் எடுத்தது போல் பல இடங்களில் இருந்தது...உயர்தினை அற்றினை என்று வேறுபாடு இல்லமால்....இருந்தது என்பது கூடுதல் சிறப்பு...கவிதை புத்தகத்திற்க்கே உண்டான கவித்துவமான வடிவமைப்பு ஒவ்வொரு கவிதை பக்கத்திலும் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் கவிதைக்கு கூடுதல் அடர்த்தியை வழங்கிகொண்டிருந்தது. எனக்கு கவிதை ஞானம் குறைவாக இருந்தாலும் கவிதை வாசிக்கும் ரசனை சற்று அதிகம்,அது திரைகவிதையானலும்,புத்தக கவிதையானலும் சரி .மனதின் வேதனையின் வீக்கத்தை குறைக்க ஜஸ் கட்டியால் ஒத்தரம் கொடுப்பது போல் நல்ல இருவரி கவிதை மனதை குளிர்வித்துவிடும். தொகுப்பில் highlighterஆல் கைதட்டியது கனியில் மாதுளைகளை உதிர்த்துவுட்டு சேகரித்து கிழப் பற்களைப் பதித்து வழிபடுகிறேன்...! ஆணியிறங்கிய நெற்றியில் தொன்மப் புகைப்படங்களை அவர்களே சுமக்கின்றனர் நம்மையே பார்த்தபடியிருக்கும் உயிரற்ற சட்டக மனிதர்கள்...! வெத்தலைகளைக் கலைந்துவிட்டு கெட்டித் தைலத்துக்குள் முங்கு நீச்சல் போட்டாள்....! காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் தேங்கியது படகினுள் மிதக்கும் சமுத்திரமாய் தெரிந்தது....! வீடெங்கும் கொசுவர்த்தியின் சாம்பல்சுருள் தடங்கள் உடைபடாமல் கிடக்கும் அவளின் உறங்காத் இரவுகளவை..! வெற்றிலை வனம் முன் ஒரேயோரு வறண்ட நாக்கை தொங்கப் போடுகிறாய்....! சின்டெக்ஸ் தொட்டியிலிருந்து வெளியேறிய மக்கள் சுவர்களில் வெள்ளைப் பாம்புகளாக நெளிந்தோடும் பிவிசி பைப்புகளுக்குள் ம் கொட்டியபடி நீர்ச்சொட்டுகளை பொறுக்கப் போகின்றனர்..! குழந்தைகளின் உடைந்த கண்ணாடி வளையல்களை வண்ண மீன் குஞ்சுகளென பாலித்தீன் பைக்குள் நீந்தவிட்டு விற்பனைக்கு வைக்கிறேன்.....! மூவரது சட்டைகளில் பரவிடும் வியர்வையின் கரிப்பு ரேகைகள் நம் வாழ்வின் வரைபடமென தள்ளாடுவேன்...! இன்னும் இதுபோன்ற பல காட்சிவடிவ கவிதைகள் இருக்கின்றன.நீங்கள் வாசிக்கும் போது முத்துராசாவின் கவிதை கால்தடம் மனவெளியில் எதவாது ஒர் இடத்திலாவது பதியும் வாசிப்போம் அனைவரும்.எழுத்துலக வானில் உயரம் பறக்க உனது சிந்தனை சிறகு விரிய வாழ்த்துக்கள் ராசா....
Ganesh Pari 22-10-2021 09:11 am