வாயை அகலத் திறந்துகொண்டு பூதம்போல் பயமுறுத்தும் ஆங்கிலம். நினைவில் தங்காத கணிதச் சமன்பாடுகள். இம்சிக்கும் இலக்கணம். பிறகு, அறிவியல், வரலாறு, புவியியல், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி. அப்பப்பா, எல்லாவற்றையும் கடந்து கரையேறுவது எப்படி?
எதை வாசித்தாலும் உடனுக்குடன் மறந்துவிடுகிறது. தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் கடகடவென்று ஒப்பிப்பதற்கு ஏதாவது வழி உண்டா?
வெறுமனே மனப்பாடம் மட்டும் செய்யாமல் உள்ளது உள்ளபடி புரிந்துகொள்வது சாத்தியமா?
வாசிப்பை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமான ஓர் அனுபவமாக மாற்றியமைக்க முடியுமா?
சாதனையாளர்களின் அடிப்படைப் பண்புகள் என்னென்ன? அவற்றைக் கடைப்பிடித்தால் நம்மாலும் சாதித்துக் காட்ட முடியுமா?
Be the first to rate this book.