எளிமையான வெளிப்பாடுகொண்ட கவிதைகள் இலக்கியத் தரமானவையல்ல எனும் மேம்போக்கான விமர்சனக் கண்ணோட்டத்தை உடைப்பவை உமாவின் கவிதைகள். வர்க்கவேறுபாடு, உலகமயமாக்கலிற்கான விலைகொடுத்த விவசாயப், பட்டாளிச் சமூகத்தின் வலி, இவற்றை மிக அழுத்தமாக முன்வைப்பவை. சமகால நடப்புகளைக் கூர்ந்து அவதானித்துப் பதியவைப்பதை ஒரு படைப்பாளியின் பொறுப்பாக, அதே சமயம் வலிந்து திணித்தலற்றுச் செய்வதையும் லாவகமாகப் பேசுபவை.
தொடர்ச்சியாக ஒரு சுயநோக்குத்தன்மையை கொண்டவையாகவும் உமாவின் பல கவிதைகள் பயணிக்கின்றன. ஒரு கவி மனதின் தேடல் துவங்குமிடமிது. தனக்குள் தான் முக்குளித்துச் சிலுப்பி எழுந்து கொண்டே நீர்ச்சூழலின் எதிரொலி வட்டங்களைக் கிரகிப்பதே அதன் பாய்ச்சல்.
Be the first to rate this book.