எப்படி சினிமா என்றவுடன் கட்டுண்டு கிடக்கிறோமோ அப்படியே இந்நூலை வாசிக்கும்போது மனத்திரையில் காட்சிகளாக வருவது நமது ஆசிரியரின் மொழியின் சிறப்பு. குறும்படத்தினை அறிமுகப்படுத்தும்போது அதன் செய்திகளைச் சிதைக்காமல் உள்வாங்கி நமக்குச் சொல்லும் போதே அந்தச் சிறந்த குறும்படங்களை நாம் கண்டிப்பாகப் பார்த்தே தீரவேண்டும் என்கிற போது குறும்படத்தின் முழுச் செய்தியையும் கூறாமல் நம்மைஅந்தந்தக் குறும்படங்களின் முடிச்சுகளையும், முடிவையும் சொல்லாமல் சொல்வதன் நேர்மையும் சமூக தளத்திலிருந்தும் இலக்கிய மேற்கோள்களிலிருந்தும் நம் மனத்திரையில் ஓடவிட்டிருப்பது ஆசிரியரின் நேர்மைக்கும், கலையின் நேர்மைக்கும் உரியது.
- புதுகை செல்வர், எஸ்.கே.வி.வீடியோஸ், புதுக்கோட்டை
நல்ல சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்க்கிற ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள் என்றால் அது மிகையில்லை. நானும் அவ்வாறே தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த சில மாதங்களில் அத்தகைய தேடல்களில் கிடைத்த குறும்படங்களைப் பற்றி இப்புத்தகத்தில் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.
- கவிஞர் இளங்கோ, திரைப்படத் திறனாய்வாளர், நிறுவனர்-செயலாளர், புதுகை பிலிம் சொஸைட்டி, புதுக்கோட்டை.
Be the first to rate this book.