நவீன வாழ்வின் பெரும் சிக்கல்களில் ஒன்றாகத் திகழும் குழந்தைப்பேறு என்கிற புள்ளியை முன்வைத்து, 'ஆட்டிசம்' பின்புலமுள்ள ஒரு கதைக்களத்தை இந்த நூற்றாண்டின் சூழலில் பேசுகிறது இந்நாவல். தற்சிந்தனை நோய் அல்லது மதி இறுக்கத்தின் பாதிப்பை ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது பார்வையிலும் பதிவதுடன், அது சார்ந்த பிரச்சனைகள் அநேகமானவற்றை ஊடுருவிச் செல்கிறது இந்நாவல். ஒரு எளிய எதார்த்த அடிக்கட்டமைப்புடன் தொன்மங்கள், குழந்தைகள் தனியுலகம், என பல்குரல்தன்மை கொண்டதாக உள்ள இந்த நாவல். நீலகண்டம் நம் ஒவ்வொருவரிலும் வெளிப்படத் தயாராக இருக்கும் விஷத்தைப் பற்றி பேசுவதால் அது தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது.
Be the first to rate this book.