நாவலாக உருப்பெறுவதற்கு முன்பாக பதினெட்டு அத்தியாயங்களும் சிறுகதைகளாக வெளிவந்தன. ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக் கூடியவை. ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. ஒரே பாத்திரதையோ அல்லது அந்த பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல: அது பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமாண்டிக் உணர்ச்சிப் பெருக்கு, குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் - இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய புதினம்.
Be the first to rate this book.